கலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி சூடு: 5 பேர் உயிரிழப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள பாடசலையில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த பாடசாலையின் அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பில் துவங்கியதாகவும்,

அதன் பின்னரே அந்த நபர் தொடக்க பள்ளியில் மர்ம நபர் நுழைந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தினர். துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit