மூச்சுத் திணறும் வங்கதேசம்; தொலைந்த வாழ்வை தேடி தஞ்சமடையும் ரோஹிங்கியாக்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வங்கதேசத்தில் நாள்தோறும் வருகை புரியும் ரோஹிங்கிய அகதிகளால், போதிய வசதிகளை செய்து தர இயலாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் தொடங்கிய வன்முறை சம்பவங்களால் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தஞ்மடைந்து வருகின்றனர். இதனால் வங்கதேசத்தில் தங்கியுள்ள அகதிகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை மிஞ்சியுள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உடனடியாக இல்லை. இந்நிலையில், ரோஹிங்கியாக்களின் வருகை எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை.

இதற்கிடையில் இன்று காலை மூன்று மீன்பிடி படகுகளில் 150 ரோஹிங்கியா அகதிகள் வங்கதேச கடற்பகுதியை வந்தடைந்தனர். வங்கதேசம் வரும் முயற்சியில் இன்னும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் மியான்மர் – வங்கதேச எல்லையில் காத்துக் கிடக்கின்றனர்.

வங்கதேசம் வந்து சேர்ந்த ரோஹிங்கிய அகதியான நூர் ஹூசைனின் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். தனது துயரம் பற்று கூறுகையில், நெஞ்சுயர ஆழம் கொண்ட குளிர்ந்த கடல்நீரில் எங்களைப் படகோட்டி படகிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்.

குழந்தைகளுடன் நீந்தி கடந்து வருகையில் எங்களில் பலர் காயமடைந்துள்ளனர் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*