காத்திருப்போர் பட்டியலில் இலங்கை அணி வீரர்

பிறப்பு : - இறப்பு :

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்னே, உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே, டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

குணரத்னே, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த ஜூலை மாதத்திலிருந்து இலங்கை அணியில் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலில் குணரத்னேவின் பெயர் பரிசீலணையில் உள்ளது.

எனினும் வரும் புதன்கிழமை நடைபெற உள்ள உடற்தகுதி பரிசோதனையில், அவர் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியும் என தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தேர்வுக்குழு உறுப்பினரான கிரேம் லெப்ராய் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குணரத்னேவின் பங்கு இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

வலக்கை துடுப்பாட்ட வீரரான குணரத்னே, பகுதிநேர பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் இலங்கை அணியின் சிறந்த வீரராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit