சவுதி அரேபியாவில் ஒசாமா பின் லேடன் சகோதரர் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக பிரபல தொழிலதிபரும் ஒசாம பின் லேடனின் சகோதரருமான பக்கிர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி உத்தரவுக்கு அடுத்து ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் இளவரசர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கைதாகியுள்ளனர்.

இந்தவகையில் சவுதியின் பிரபல தொழில் நிறுவனமான பின் லாடன் குழுமத்தின் தலைமை அதிகாரியும் அல் கொய்தா பயங்கரவாத குழுவின் தலைவர் ஒசாமாவின் சகோதரருமான பக்கில் பின் லேடன் கைதாகியுள்ளார்.

உலக இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் சவுதியின் மெக்கா மற்றும் மெதீனா பகுதிகளை துவக்கம் முதலே சீரமைத்து வருவது பின்லேடன் குழுமமாகும்.

சவுதி அரச குடும்பத்துடன் தொன்று தொட்டே நெருங்கிய உறவு வைத்திருக்கும் பின்லேடன் குழுமத்தின் முக்கிய நபரை கைது செய்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் இதுவரை 201 பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கும் சவுதி அரசு100 பில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பட்டத்து இளவரசர் சல்மானின் இந்த அதிரடி நடவடிக்கையானது துணிவானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானது எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*