மனுஸ் தீவு முகாமிற்கு மாற்று இடம்; அகதிகளுக்காக ரூ.523 மில்லியன் வாரி இறைத்த ஆஸ்திரேலியா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பப்பு நியூ கினியா: மாற்று முகாமை கட்டமைக்கும் பணிக்காக ரூ.523 மில்லியன் பணத்தை ஆஸ்திரேலிய அரசு வாரி இறைத்துள்ளது.

மனுஸ்தீவு லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பப்பு நியூகினியா உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அம்முகாம் கடந்த அக்டோர் 31 அன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள அகதிகளை East Lorengau என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாற்று முகாமிற்கு செல்ல ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அம்முகாமை 440 பேர் தங்குமளவு மேம்படுத்த ‘டோல் குரூப்’ என்ற நிறுவனத்திற்கு 8.1 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலிய அரசு கட்டணமாக செலுத்தியுள்ளது. 24 நாட்களுக்கான வேலைக்கு இப்பெருந்தொகை செலுத்தப்பட்டுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

மாற்று முகாமிற்கு ஆகும் செலவு மிகவும் குறைந்தது என ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய வரிப்பணத்திலிருநது மில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 523 மில்லியன் ரூபாய் ஆகும்.

ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கையின் காரணமாக, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 600 அகதிகள் மனுஸ் தீவின் லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள முகாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மூடப்பட்டுள்ள இம்முகாமிலிருந்து மாற்று முகாமிற்கு செல்ல மறுத்த பத்து நாட்களுக்கு மேலாக அகதிகள் போராட்டம் நடந்து வருகின்றது.

மாற்று முகாம் உள்ளூர் வாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என அங்கு இடம்பெயர மறுக்கும் அகதிகள், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து நிரந்தரமானத் தீர்வைக் கோருகின்றனர். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியுடன் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*