ஜோதிகா என்னை மாற்றினார்:நயன்தாரா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகைகள் படப்பிடிப்பு ஒய்வை பல வழிகளில் கழிக்கின்றனர். சிலர் நடிகர், நடிகைகளுடன் தமாஷாக பேசி அரட்டை அடிப்பது உண்டு. இன்னும் சிலர் செல்போனை நோண்டிக் கொண்டு இருப்பார்கள். போனில் தோழிகளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருப்பார்கள். வேறு சிலர் கேரவனில் படுத்து உறங்குவார்கள். நயன்தாராவை பொறுத்தவரை செல்போனில் படங்கள் பார்ப்பது. தோழிகளுக்கு தகவல்கள் அனுப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தது. அவரை ஜோதிகா புத்தகம் படிக்கும் பழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது:–

ஜோதிகா ஒரு தடவை எனக்கொரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகத்தை இரண்டு நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும் என்று கூறினார். நானும் அதை படித்தேன். ஆனால் இரு நாட்களில் முடிக்க முடியவில்லை. ஆனாலும் புத்தகம் படிப்பதால் மனம் இருக்கத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாய் மாறுவதை உணர்ந்தேன். ஜோதிகா அறிவுரைப்படி இப்போது நான் புத்தக பிரியை ஆகிவிட்டேன். பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். படப்பிடிப்பு ஒய்வில் அவற்றை படிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நயன்தாரா, தற்போது ‘நண்பேன்டா’, ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘நானும் ரவுடிதான்’ படங்களில் நடித்து வருகிறார். ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். இருவருடங்களுக்கு அவரிடம் படங்கள் கைவசம் உள்ளன. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.ந நயன்தாராவும் ஜோதிகாவும் இணைந்து ஏற்கெனவே ‘சந்திரமுகி’ என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*