சமாதானத்திற்கான நேரம் பேர்ன்நகரில், பல்சமயங்களின் இரவு, சனிக்கிழமை 11. 11. 2017

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

unnamed-1

10வது தடவையாக பேர்ன் நகரில் பல்சமயங்களின் இரவு எனும் தலைப்பில் பல பொதுவமைப்புக்கள் ஒன்றிணைந்துகூடி ‘சமாதனத்திற்கான நேரம்’ எனும் தலைப்பில் பல்லினப்பல்சமயப் பண்பாட்டு நிகழ்வுகளை பல் இடங்களில் நடாத்தி நிறைந்துள்ளது.

பல ஆயிரம் மாணவர்கள் பண்பாட்டு மற்றும் சமய எல்லைகளைக் கடந்து மாந்தர்களின் சமாதானமான இசைந்த வாழ்வின் தேவையினை முதன்மைப்படுத்தி இந்நிகழ்வில் பங்கெடுத்தது சிறப்பாக அமைந்தது.

17.00 மணிக்கு சிற்றுண்டி விருந்தினைத் தொடர்ந்து 18.00 மணிக்கு பேர்ன் நகரசபைமண்டபத்தில் நகரசபைத்தலைவர் திரு. அலெக்ஸ் வ்பொன் கிறாப்பென்றீட் (Alex von Graffenried), புதுக்கவிஞர் திரு. அன்டிறேயாஸ் கெஸ்லெர் (Andreas Kessler), ஓசைக்கலைஞர் திரு. பௌலி லேமான் (Pudi Lehmann) மற்றும் பல்சமயங்கிளன் பிரிநிதிகளும் பங்கெடுக்க நிகழ்வு தொடங்கப்பெற்றது.

ஈழத்து சைவத்தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தி சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் நகரசபைத்தலைவருடன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் செல்வி அபிராமி அவர்கள் உலகத்தில் சமாதனம் நிலைக்க தமிழர்களின் வாழத்தினைத் தாய்தமிழில் சமையத்தலைவர்கள் நடுவில் உரக்க உரைத்தார்.

19.00 மணிக்கு அனைவரையும் ஓர நிகராக நோக்கும் தன்மையினை சமயங்கள் ஏற்படுத்த இலங்கையில் பல்சமய இல்லம் ஒன்றை நிறுவி பல்லின மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மதிப்பளித்து வாழ ஓரு முயற்சியினை இலங்கையிலும் செய்ய முடியுமா எனும் பொருட்பட கருத்தரங்கு பேர்ன் நகரசபைத்தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்விலும் பல நூறு மக்கள் பங்கெடுத்தனர். இதற்கு சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தர்மலிங்கம் சசிக்குமார் தலைமை தாங்கினார். இலங்கை பௌத்த மதததலைவர் திரு. பண்டே அவர்களும் இதில் பங்கெடுத்திருந்தார்.

19.30 மணிக்கு (Synagoge, Kapellenstrasse 2, 3011 Bern) 1906ம் ஆண்டு பேர்ன் நகரில் நிறுவப்பட்ட யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் சைவநெறிக்கூடம் பங்கெடுத்த பேராளர் அரங்கில் ஒரு கடவுகள் பல பெயர்கள், ஒரு உண்மையான கடவுளுக்காகப் பெரும் போர் அல்லது புதிய ஆன்மீகத்தால் புரிந்துணர்வு’ எனும் தலைப்பில் நிகழ்வினை யுத சமயத்தலைவர் திரு. மைக் அவர்களுடன் இணைந்து நடாத்தியது. பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. திருச்செல்வம் முரளிதரன் அவர்கள் நிகழ்வில் தலைமை தாங்கினார். நிகழ்வினை கலாநிதி. திருமதி காபி குணொக் அவர்களும் தில்லையம்பலம் சிவகீர்த்தி அவர்களும் தொகுத்து வழங்கினர். 21.15 மணிவரை நிகழ்வு நடைபெற்றது. பெருந்தொகையான சுவிஸ்நாட்வர்களும் பிறநாட்டவர்களும் நிறைந்திருந்தனர்.

அதேநேரத்தில் பல்சமய ஐரோப்பாத் திடலில் அமைந்துள்ள பல்சமய இல்லத்திற்கும், அருள்ஞானமிகு ஞர்னலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள்ளும் பல ஆயிரம் மக்கள் வருகை அளித்தனர். திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன் ஐயா அவர்களும், திருநிறை. செல்லையா தர்ணன் அவர்களும் செந்தமிழ் வழிபாட்டு முறையினை வருகை அளித்த பல்லினப்பண்பாட்டு மக்களுக்கும் செயற்பாட்டு, கோட்பாட்டு முறையினை எடுத்து விளக்கினர். சைவசமயத்தின் சித்தாந்தத்தையும் விளக்கி உரைத்தனர்.

unnamed-2 unnamed

unnamed-1

நிறைவில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் யூதமதத்தலைவர் முன்னினையில் ஒரு கருத்தினை சைவநெறிக்கூடம் எடுத்துரைத்தது, 2000 ஆண்டுக்ள கழிந்து நீங்கள் உங்கள் நாட்டினை அடைந்துள்ளீர்கள், 60 இலட்சம் யூதர்கள் நினைவாக உங்கள் வழிபாட்டுத் தலத்தில் ஒளிவிளக்கு மின்னுகிறது, இந்தக் கார்த்திகை மாதத்தில் எங்கள் இனத்திற்கு உயிர்க்கொடை அளித்தவர்கள் நினைவினை நாங்களும் சுமந்து உள்ளத்தில் விளக்கேற்றி நிற்கிறோம். உங்கள் கனவு பலித்ததுபோல் எங்கள் மக்களின் கனவும் பலிக்கட்டும், உலகின் எந்த மூலையில் எந்த வடிவத்தில் அடக்குமுறை எழுந்தாலும், யாவரும் அடிமைத்தனத்திற்கு ஒன்றுபடுவோமாக என உலகத்திற்கு செய்தி கூறி நிறைகிறோம்.

21.30 மணிமுதல் சமாதானம் அளிக்கும் சைவசமயத்து மற்றும் யூதசமயத்து திருப்பாடல்கள் மற்றும் புhணக்கதைகள் இயல், இசை, நாடகவடிவில் நிகழ்வுகளாக அளிக்கப்பட்டது. பெருமளவு சுவிஸ் நாட்டவர்களின் நெஞ்சில் நிறைந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. லுட்சேர்ன் மாநிலத்திதைச் சேர்ந்த சலங்கை நர்த்தனாலயா நடனப்பள்ளியின் ஆசிரியை திருமதி. வசந்தகுமாரன் மங்கநாயகி அவர்கிளின் மாணவிகள் சிறப்பு நடனம் வழங்கினர். மகாகவி அவர்கள் பெண்விடுதலையையும், தமிழ்ப் பண்ணினை பக்தியுடன் வடித்த கவி வரிகளுக்கு மாணவிகள் உயிர் கொடுத்திருந்தனர். மொழி புரிhய வெளிநாட்டவர்களும் இராக, தாள, பாவத்தில் பயங்கி நின்றனர்.

வெண்தாமரை கலைவாணியின் வீணையிசையினை செல்வி ஜக்சனா நவரத்தினம் அவர்கள் பிரெஞ்மொழிபேசும் சுவிஸ் பகுதியில் இருந்து வந்து இன்னிசை விருந்தாக அளித்துச் சென்றார். தமிழர் கலையினை சுவிஸ் நாட்டவர்கள் கேட்டு வியக்க இது வாய்பளித்தது.

இராசைய மகேஸ்வரன் அவர்களின் புதல்வர்களின் சிறப்பு இசைவாத்திய நிகழ்வும், அப்புத்துரை சண்முகதாஸ் அவர்களின் பின்னணி இசை அனைத்து நிகழ்வுகளுக்கும் மேலும் சிறப்பினை அளித்தது. வளர்ந்து வரும் இளந்தமிழச் செல்வங்கள் அளித்த இசையில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் சேர்ந்து இசைக்க முனைப்பளித்தது. எழுந்து நின்று பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்தி நிறைந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit