அரசு அதிகாரிகளுக்கு விருந்தாக மாணவிகள்

பிறப்பு : - இறப்பு :

சீனாவில் அரசு அதிகாரிகளுக்கு மாணவிகள் விருந்தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சான்ஸி(Shanxi) மாகாணத்தில் தொழிலதிபர்கள் சிலர் தங்களது சாதமாக சில காரியங்களை செய்து முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு பரிசாக பள்ளி மாணவிகளை தொழில் அதிபர்கள் விருந்தாக்கி உள்ளனர்.

இதில் பல மாணவிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் சிலர் பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எழுந்துள்ள புகார்களில் 11ம் வகுப்பு மாணவிகள் மூலமாக 10ம் வகுப்பு மாணவிகளை அழைத்து வரச்செய்து, அரசு அதிகாரிகளுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொள்ள செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பணத்திற்காக மாணவிகளை விற்ற 11ம் வகுப்பு மாணவிகள் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மற்றொரு மாணவி 16 வயதுக்குட்பட்டவர் என்ற காரணத்தால், பொலிசார் கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்துள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit