டுவிட்டரில் வந்த அதிரடி மாற்றம்: இலங்கை வீரர்களின் பெயர்களை ஐசிசி எப்படி வெளியிட்டிருக்கு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்காக சமூக இணையத் தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை அதிக அளவில பயன்படுத்தி வருகின்றனர். இதில் பேஸ்புக்கில் எவ்வளவு எழுத்துக்களையும் பதிவு செய்யலாம். டுவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இதனால் நாம் சொல்ல வந்த கருத்துக்களை சுருக்கமாகத்தான் கூற இயலும். இதனால் விரிவான கருத்துக்களை இரண்டு அல்லது மூன்று முறை டுவிட் செய்ய வேண்டும். இதனால் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை கவனத்தில் கொண்ட டுவிட்டர் நிறுவனம், 140 எழுத்துக்கள் என்பதை 280 ஆக நீடித்துள்ளது. இதன்மூலம் தற்போது டுவிட் செய்பவர்கள் விரிவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பொதுவாக மிகவும் நீளமாக இருக்கும். இதனால் ஐ.சி.சி. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் பெயர்களை சுருக்கிதான் எழுதும். தற்போது 280 எழுத்துக்கள் என்பதால் முழுப் பெயரையும் பதிவிட்டுள்ளது. இதற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வேகபந்து வீச்சாளர் வாஸ் பெயரை, 56 எழுத்துக்கள் கொண்ட Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas என முழுப்பெயரையும், 48 எழுத்துக்கள் கொண்ட குமார் தர்மசேனா பெயரை Handunnettige Deepthi Priyantha Kumar Dharmasena எனவும், 49 எழுத்துக்கள் கொண்ட டிக்வெல்லா பெயரை Dickwella Patabendige Dilantha Niroshan Dickwella எனவும், 51 எழுத்துக்கள் கொண்ட ஹெராத் பெயரை Herath Mudiyanselage Rangana Keerthi Bandara Herath எனவும் பதிவிட்டு, டுவிட்டர் நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*