சோதனையில் தோற்றுப் போன ஐபோன் டென்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையின் புதிய வரவான ஐபோன் டென் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

சுமார் ரூ.85,000 மதிப்பிலான இந்த போனை வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ஸ்கொயர் டிரெட் என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது.

அப்போது, ஐபோனை ஆறடி உயரத்திலிருந்து பக்கவாட்டில் கீழே போட்டு சோதனை நடத்தினார். அதில் போனின் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பின்புறம் முழுவதும் சேதமடைந்தது மற்றும் திரை செயல் இழந்தது. அதேபோல் திரை தெரியும்படி கீழே போட்டபோது, அதன் முகம் கண்டறியும் அம்சம் செயலிழந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐபோன் டென் நீரில் சோதனை செய்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் டென் திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய முந்தைய மாடல்களைக் காட்டிலும் இரு மடங்கு செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போனைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் அதற்கு பாதுகாப்பு உறை போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*