30 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ் (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜேர்மனியில் நர்ஸ் ஒருவர், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையில் 30 நோயாளிகளை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ஜேர்மனியைச் சேர்ந்த 38 வயது முன்னாள் ஆண் செவிலியர் ஒருவர் இந்த கொலை குற்றத்தினை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வடக்கு ஜேர்மனியில் உள்ள Delmenhorst என்னும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த இவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில், மனநல நிபுணர் ஒருவரிடம் அந்த நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நபர் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை, நோயாளிகள் பலருக்கும் இதயத்தில் மருந்தை உட்செலுத்தி கொலை செய்ததாக நம்பப்படுகிறது.

இவ்வாறு 30 பேரை கொன்றிருக்கலாம் என்றும், மேலும் 60 நோயாளிகளுக்கு இதேபோல் இதயமருந்து அளித்திருந்தாலும் அவர்கள் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர் என்றும் மனநல ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிசார் அந்த மருத்துவமனையில் நடந்த சுமார் 100 சந்தேகத்திற்கிடமான மரணங்களை பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும், Niels H என்று அதிகாரிகளால் அறியப்படும் அந்த செவிலியர் 2008ம் ஆண்டு முதலே கொலை முயற்சி வழக்கில் ஏழரை ஆண்டுகால சிறைவாசத்தினை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*