அலைபேசிக்காதலால் பறிபோனது தங்கச்சங்கிலி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

chain-rowbary

அலைபேசிக்காதலால் பெண் ஒருவரின் இரண்டு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலி பறிபோனது.

இந்தச் சம்பவம் காலியில் காரபிடியப் பகுதியில் நடந்துள்ளது.

அலைபேசியில் காதல் கொண்டிருந்த இருவர் மருத்துவமனை ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். அங்கு வருகை தந்த பெண்ணின் 43 வயதுடைய காதலன், பெண்ணின் கழுத்தில் 2 பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலி மீது கண் வைத்துள்ளார்.

அந்த நபர் குறித்த பெண்ணிடம் “உன் கழுத்தில் தொங்கும் தங்கச் சங்கிலிக்குப் பென்ரன் ஒன்றை வாங்கி வந்துள்ளேன். அதை என் கைகளாலேயே உன் கழுத்தில் போட்டு விட ஆசைப்படுகிறேன் அதனால் உன் கழுத்திலுள்ள சங்கிலியைக் கழற்றித் தா” எனக் கேட்டுள்ளார்.

காதலனின் ஆசை வார்த்தையை நம்பிய பெண், தனது தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.

அதனைப் பெற்ற காதலன், “மருத்துவமனையை விட்டுப் போகும் போது அழகான இடத்தில் வைத்து உன் கழுத்தில் போட்டு விடுகிறேன். அது வரை இந்தச் சங்கிலி என்னிடம் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிக்சை பெறுவதற்கு பெண் காத்திருந்த தருணத்தில், தங்கச்சங்கிலியுடன் காதலன் தலைமறைவாகியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் காதலன் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மருத்துவமனைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit