குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்!! பல ஆங்கிளில் படமெடுத்த பெயிண்டர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெயிண்டிங்க் அடிக்க போன இடத்தில், பக்கத்து பில்டிங்கில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போன் மூலம் படம் பிடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பி.ஜி பணிக்கு செல்லும் 30 பெண்கள், தெற்கு பேங்களூர் பகுதியில் உள்ள, பி.டி.எம். லேயவுட் 1வது ஸ்டேஜில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகின்றனர்.

இதே சமயம், பக்கத்து பில்டிங்கில் பெயிண்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், காலையில் 8 மணியளவில், குளிப்பதற்காக்ச் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த போது, எதேர்ச்சையாக ஜன்னல் வழியாக பார்த்த போது, தன்னை ஒருவர் மொபைல் மூலம் படம் பிடிப்பதை உணர்ந்த அந்தப் பெண், திடுக்கிட்டு ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்துள்ளார்.

பக்கத்து பில்டிங்கில் பெயிண்டிங் அடிக்க வந்திருந்த வாலிபர் தான் பில்டிங்க் சுவற்றிலிருந்து தொங்கியபடி இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தான் குளித்துக் கொண்டிருந்த போது நடந்ததை தயக்கத்துடன், தனது தோழிகளிடம் கூற, தோழிகள் ஹாஸ்டல் உரிமையாளரின் உதவியுடன், போலீஸாரிடம் இது குறித்து புகாரளித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீஸார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், தான் தொடர்ந்து சில நாட்களாக பெண்களைக் கண்காணித்து வருவதாகவும், பெண்கள் குளிக்கும் நேரத்தை கணக்கிட்டு அதன் படி, படமெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்ணை மாணபங்கப்படுத்திய அந்த இளைஞர் மீது, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354 (c)-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

இச்சட்டத்தின் படி, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*