ஏர் ஆசியா விமானத்தின் வால் மீட்பு!

பிறப்பு : - இறப்பு :

இந்தோனேஷியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர் ஆசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ இசட் 8501 விமானம், கடந்த 28ம் தேதி சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது வெடித்து சிதறி கடலில் விழுந்தவிமானத்தின் பாகங்களை மீட்கும் பணிகளில் இந்தோனேஷிய மீட்புக்குழு ஈடுபட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக ஜாவா கடலுக்குள், கடலின் அடிப்பகுதியில் இருந்த ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதியை மீட்புக்குழுவினர் மீட்டு, வெளியில் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து இந்தோனேஷியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவின் இயக்குனர் சுப்ரியாடி கூறுகையில், ”எங்களது ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலின் அடிப்பகுதியில் இருந்த ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதி கேபினை நேற்று திறந்து பார்த்தனர். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும், விமானத்தின் வால் பகுதி பத்திரமாக மீட்கப்பட்டு, வெளியில் கொண்டு வரப்பட்டது.

விமானம் ரேடாரில் கடைசியாக ஒளிர்ந்த இடத்தில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் விமானத்தின் கறுப்புப்பெட்டி இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கறுப்புப்பெட்டி விமானத்தின் மற்ற பகுதிகளுடன் இல்லாமல், தனியாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit