பாடகர் ஜேசுதாசுக்கு 75-வது பிறந்த நாள் மூகாம்பிகை கோவிலில் சங்கீத அர்ச்சனை…

பிறப்பு : - இறப்பு :

பிரபல கர்நாடக இசை மற்றும் சினிமா பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு நேற்று 75-வது பிறந்த நாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மலையாளம், தமிழ் மற்றும் பிறமொழிகளில் ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களையும், பல்வேறு மதபக்தி பாடல்களையும் பாடியுள்ளார். பிறந்த நாளையொட்டி அவர் நேற்று கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மூகாம்பிகை முன்பு அவர் ‘சங்கீத அர்ச்சனை’ செய்து வழிபட்டார்.

கோவிலுக்கு ஜேசுதாஸ் வந்திருக்கும் தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள அவரது இசை ரசிகர்கள் திரண்டு வந்தனர். சிலர் ஜேசுதாசிடம் ரசிகர்கள் மத்தியில் பேசும்படி கூறினர். அதற்கு அவர், ‘நான் இசையில் கவனம் செலுத்துகிறேனே தவிர, பேசுவதிலோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதிலோ கவனம் செலுத்தவில்லை’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit