இந்நிலை நீடித்தால் குடும்பங்களாக தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kaani-issue

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமக்கு தீர்வு கிடைக்காது இந்நிலை நீடிக்குமானால் குடும்பங்களாக தற்கொலை செய்ய நேரிடும் என தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்….

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 255 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எமது காணிகள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் உறுதிக்காக பதில் கிடைக்கவில்லை.மழை வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் நாம் நோய் நொடிகளுக்கு உள்ளாகியுள்ளோம்.

அதனைவிட பாம்பு பூச்சிகள் வாழும் இடத்தில் வீதியருகே நாம் இருப்பதால் அவற்றினாலும் பாதிக்கப்படுகிறோம். கூலி வேலை செய்து பிழைக்கும் நாம் இன்று 255 நாளாக வீதியில் கிடக்கிறோம்.

எமது குடும்பத்தை பார்க்க எமது வருமானம் போதாதுள்ளது.பிள்ளைகளை பாடசாலை அனுப்பமுட்டியவில்லை, எமது காணிகளை விடுவித்தால் எமது காணிகளில் விவசாயம் செய்து பயன்தரு மரங்களில் கிடைக்கும் பயன்கள் மூலம் நிம்மதியாக வாழ்வோம்.

அவ்வாறு இல்லாது இந்த வீதியில் வாழும் நிலை தொடருமானால் குடும்பங்களாக தற்கொலை செய்ய நேரிடும் என மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit