எல்லா நடிகர்களும் வாழ்த்து சொல்ல மக்களுக்காக யோசித்து பேசிய ஒரே நடிகர் விஜய்

பிறப்பு : - இறப்பு :

கடந்த வருடம் இதே நாள் இந்தியாவில் அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் புதிய நோட்டுகள் வரயிருப்பதாகவும், இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது.

இதனால் கருப்பு பணம் ஒழிந்ததா என்று தெரியவில்லை, ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்து, சின்ன சின்ன தொழில் செய்து பிழைக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

அரசு கொண்டு வந்த இந்த புதிய திட்டத்திற்கு ரஜினி, கமல் முதல் சூர்யா என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். விஜய்யும் இந்த திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார், ஆனால் இதுபோல் ஒரு முயற்சியை எடுக்கும் போது மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை எல்லாம் நன்றாக பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உடனே அமல்படுத்தியதால் நிறைய மக்கள் அவதிப்பட்டதாக நான் நிறைய செய்திகளில் பார்க்கிறேன், இது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அப்போதே பேசியிருந்தார் விஜய்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit