Galaxy Note 9 தயாரிப்பில் சாம்சுங் நிறுவனம்

பிறப்பு : - இறப்பு :

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 8 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

வித்தியாசமான வடிவம் மற்றும் புதிய அம்சங்களுடன் களமிறங்கிய இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் Galaxy Note 9, Galaxy S9 மற்றும் S9 Plus ஆகிய கைப்பேசிகளை வடிவமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

இதன்படி 2018ம் ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியில் Note 9 கைப்பேசியும், முதல் காலாண்டிற்குள் Galaxy S9 மற்றும் S9 Plus ஆகிய கைப்பேசிகளும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மூன்று வகையான கைப்பேசிகளிலும் Snapdragon 845 Processor பயன்படுத்தப்படவுள்ளது.

தவிர Note 8 கைப்பேசியில் தரப்பட்டிருந்த 6.3 அங்குல அளவுடைய திரையே புதிய கைப்பேசிகளிலும் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit