தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளுக்கு ‘பன்றி காய்ச்சல்’ உறுதியானது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிஜாமாபாத் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கவிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு அதிகரித்ததையடுத்து கடந்த செவ்வாயன்று தனியார் மருத்துவமனையில் கவிதா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கவிதாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit