பாகிஸ்தானின் மிகப் பெரும் பணக்கார எம்.பி. நவாஸ் ஷெரீஃப்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டின் மிகப் பெரும் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள சொத்து விவரப்படி, அவரது பெயரிலும், அவரது மனைவியின் பெயரிலும் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.236 கோடி

(பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) ஆகும்.

கடந்த நிதியாண்டில் ரூ.171 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு, ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகரித்துள்ளது.

இயந்திரப் பொருள் உற்பத்தி நிறுவனம், காகித ஆலைகள், நூற்பாலைகளில் அவருக்குச் சொந்தமான பங்குகளின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்றாலும், சர்க்கரை ஆலை

ஒன்றில் அவர் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து அவருக்கு ரூ.23.9 கோடி பணம் வந்துள்ளது.

இது தவிர, ரூ.1 கோடி மதிப்புடைய “லேண்ட் குரூஸர்’ உள்ளிட்ட 4 ஆடம்பரக் கார்கள் அவரிடம் உள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit