தலாய் லாமா- சீனா இடையே நேரடிப் பேச்சுவார்த்தை: அமெரிக்கா வலியுறுத்தல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

china-flag

தலாய் லாமாவும், சீனாவும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

திபெத்திய தலைவர் தலாய் லாமா, சீனா ஆகிய இரு தரப்பும் தங்களின் பிரதிநிதிகள் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து

அமெரிக்கா இவ்வாறு கருத்து தெரிவித்தது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி பேசுகையில், எந்த விதமான நிபந்தனைகளையும் விதிக்காமல், சீனாவும் தலாய்

லாமாவும் பேச்சு நடத்த வேண்டும் என எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளோம்.

கருத்து வேறுபாடுகளைக் களைய, அவர்கள் நேரடியாகவோ அல்லது தங்களது பிரதிநிதிகள் வாயிலாகவோ பேச்சு நடத்தலாம்.

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வினால் சீனாவின் அனைத்து மக்களும் பயனடைவர் என நம்புகிறோம். தலாய் லாமாவுடன் பேச்சு நடத்தக் கூடிய வாய்ப்பை சீனா

பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்த விரும்புகிறது என்று ஜென் ஸாக்கி கூறினார்.

தலாய் லாமா – சீனா பேச்சு குறித்து கூடுதல் விவரங்களை அமெரிக்கா அறிந்துள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இரு தரப்பினரிடையே பேச்சு குறித்து தகவல்கள்

வந்துள்ளதுதான் தெரியும் எனவும் அது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit