பிரித்தானியா சாலைகளில் செயல்படாமல் இருக்கும் கமெராக்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியா சாலைகளில் இருக்கும் 2,838 Speed Camera-களில் 1,486 மட்டுமே செயல்படும் நிலையில் முக்கியமான நான்கு பகுதிகளில் ஒரு கமெரா கூட செயல்படாத நிலை உள்ளது

பிரித்தானியா சாலைகளில் ஆங்காங்கே Speed Camera-கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேகமாக செல்வது, டிராபிக்கில் நிற்காமல் செல்வது, டோல்கேட் பூத்களில் பணம் செலுத்தாமல் செல்வது போன்ற சாலை விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவே இவ்வகையான கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

தற்போது நாட்டில் உள்ள 2,838 கமெராக்களில் 1,486 மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், மற்ற கமெராக்கள் செயல்படாமல் உள்ளது.

அதிலும் Cleveland, North Yorks, Durham மற்றும் Northamptonshire பகுதிகளில் ஒரு இடத்தில் கூட Speed Camera வேலை செய்யவில்லை.
West Yorkshire, South Yorkshire, Kent, Greater Manchester மற்றும் Cheshire பகுதிகளில் கால் பங்குக்கும் குறைவான கமெராக்களே செயல்படுகின்றன.

London, Notts, Lancashire, Suffolk and Northern Ireland பகுதிகளில் மட்டும் தான் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கமெராக்களும் செயல்படுகின்றன.

இது குறித்து தேசிய காவல்துறை அதிகாரிகள் கவுன்சில் தெரிவிக்கையில், Speed Camera-களை பயன்படுத்தும் விடயத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தனிப்பட்ட பொறுப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மோட்டார் வாகன சங்கமான Automobile Association தலைவர் Edmund King கூறுகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால் தான் அதிகமான கமெராக்கள் செயல்படவில்லை.

வாகன ஓட்டிகளிடம் பெறப்படும் அபராதங்கள் அனைத்தும் கருவூலத்துக்கு தான் செல்வதாக கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*