கத்தியால் தாக்கவந்த மர்மநபர்: சாதுர்யமாக குடும்பத்தை காப்பாற்றிய வீரத்தந்தை (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

சீனாவில் சாலையில் திடீரென கத்தியுடன் தோன்றிய மர்ம நபரிடம் இருந்து தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நபர் ஒருவர் காப்பாற்றியது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் ஜிஞ்சியான் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கையில் கத்தியுடன் எதிரில் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இந்த நபரின் மனைவியை தாக்க முயல்கிறார்.

அதிஷ்டவசமாக மனைவி மீது காயம் எதுவும் ஏற்படாத நிலையில், கைக்குழந்தையை கையில் வைத்திருக்கும் கணவரை அந்த நபர் தாக்க முயல்கிறார்.

கையில் பச்சிளம் குழந்தை இருந்தாலும், சிறிதும் பயம் இல்லாமல் தனது குழந்தைகள் மற்றும் மனைவியை பாதுகாத்துக் கொண்டே அந்த மர்மநபர் தாக்க முயன்றபோது அவரை சாதுர்யமாக தடுத்து தாக்கியுள்ளார் அந்த வீரத்தந்தை.

ஏற்கனவே 7 நபர்களை கத்தியால் தாக்கியிருந்த அந்த மர்ம நபர், இதையடுத்து அங்கிருந்து எழுந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அந்த நபரை பிடித்ததுடன் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனை அறிந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரனையை பொலிசார் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit