ஆண்கள் சொந்த மகளையே திருமணம் செய்து கொள்ளலாம்: மத குருவின் சர்ச்சை பேச்சு

பிறப்பு : - இறப்பு :

எகிப்தின் பிரபல மத குரு ஒருவர், ஆண்கள் ரத்தபந்தமல்லாத சொந்த மகள்களை திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் பிரபல சலாஃபிஸ்ட் மதகுருவாக இருப்பவர் Al-Shafi’i, இவரே விவாதத்துக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரத்தபந்தமற்ற மகள்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல தேவை என்றால் திருமண பந்தத்திலும் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மத குருவின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய பேராசிரியர் Mazen Al-Sersawi இன் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த காணொளிக்கு பொதுமக்கள் மத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் பிறக்காத மகள்கள் சொந்த மகள்கள் இல்லை என்பதால், ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்வதில தவறில்லை என்றார்.

ஷாரியா சட்டத்தின்படி குறித்த பெண் அந்த ஆணுக்கு மகளாக முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மன நிலை பாதித்தவர்கள் தான் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit