13ம் திகதி வெள்ளிக்கிழமை ஆபத்தானதா?

பிறப்பு : - இறப்பு :

13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது

13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர்.

பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி, இந்த எண் முடிந்த வரை தவிர்க்கப் பட்டிருக்கிறது. தங்கும் விடுதிகளில் 13ம் எண் அறை இருக்காது. பல நாடுகளில் வீதிகளை அல்லது வீடுகளை வரிசைப் படுத்தும் பொழுது கூட 13ம் எண் வீதியோ, வீடோ இருந்ததில்லை. அதிலும் மாதத்தின் பதிமூன்றாம் நாள் வெள்ளிக் கிழமையாக இருந்து விட்டால், அது மிகவும் துரதிஷ்டம் கொண்ட நாளாக கருதப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இந்த மூடப் பழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்த வெள்ளிக்கிழமை 13 ம்திகதியை முன்வைத்து மேற்குலகில் பல திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

கணக்கியலின் படி பன்னிரண்டு என்பது ஒரு முழுமையான எண்ணாகவே இதுவரை கருதப் படுகிறது. மெசபொடோமிய சமவெளிகளில் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்த நம்பிக்கை தொடர்கிறது. இஸ்ரவேலர்களின் அதாவது யூதர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்கள், ஒரு கடிகாரத்தில் பன்னிரண்டு மணிக்கான சுழற்சி முறைகள், கிரக்க கடவுளர் பன்னிரண்டு பேர் என பட்டியலிட ஏராளம் தகவல்கள் உள்ளன. பதிமூன்று என்பது பன்னிரண்டிலிருக்கும் சமவிகித வகுபடும் தன்மையை குலைக்கும் ஒரு எண் என்பதால் இயல்பாகவே இது முற்கால கணக்கியலாளர்களால் வெறுக்கப்பட்டது.

நாம் தற்போது பரவலாக பின்பற்றும் கிரிகோரியன் நாட்காட்டியின் படி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 13ம் தேதி வெள்ளிக் கிழமைதான் வரும். ஒரு சில வருடங்களில் இப்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட வருவதுண்டு. ஆனால், பெருவாரியாக வருடத்தில் ஒரு மாதம் கண்டிப்பாக வெள்ளிக் கிழமை பதிமூன்றாவது திகதியாக இருக்கும்.

ஏனைய ஐரோப்பிய நாடகளிலுள்ள மக்களுக்கு இது ஒரு துர்திஷஷ்டமான திகதியான இருந்தாலும் பிரெஞ்சு மக்கள் இதை ஒரு அதிஷ்டமான திகதியாக கருதுகிறார்கள். இந்த நாளில் சிறப்பு குலுக்கல் என்ற பெயரில் சுப்பர் லொட்டோ என்ற நல்வாய்ப்பு சீட்டிழுப்பை பிரான்ஸ் அரசாங்கம் நடத்துகிறது..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit