பின்லேடனின் ரகசியங்கள் என்ற பெயரில் பொய்களை பரப்பும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒசாமா பின்லேடனின் ரகசியங்கள் மற்றும் அவரது மகன் திருமண வீடியோ உள்பட 5 லட்சம் கோப்புகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா ஒசாமா பின்லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல்கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பின்லேடன் இறந்த பிறகு இந்தக் கணினி கைப்பற்றப்பட்டது.

சில கோப்புகள் பாதுகாப்பு காரணங்களாலோ அல்லது சிதைந்திருப்பதாலோ வெளியிடப்படவில்லை என்று சிஐஏ தெரிவித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள 18,000 ஆவணங்கள், 79,000 ஒலிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட காணொளிகளும் “பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை” வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சிஐஏவின் இயக்குனர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

பின்லேடனின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ஹம்சாவின் திருமண காணொளியும் தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளிகளுள் அடக்கம். ஹம்ஸா அல் கொய்தாவின் எதிர்கால தலைவராகத் கருதப்படுகிறார்.

காணொளியை பகுப்பாய்வு செய்ததில் அது ஈரானில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு ஹம்சாவின் இளமைக்கால காணொளிகளே பொதுவெளியில் வந்துள்ளன.

பின் லேடனின் காணொளி பதிவுகளில் அன்ட்ஸ், கார்ஸ், சிக்கி லிட்டில் மற்றும் தி மஸ்கடியர்ஸ் போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் இருந்தன.

பிரிட்டனில் வைரலான “சார்லி பிட் மை ஃபிங்கர்” என்னும் காணொளி மற்றும் பல யூடியூப் காணொளிகளும் இருந்தன. பிரபல கம்ப்யூட்டர் விளையாட்டான ஃபைனல் பேண்டஸி VII இருந்துள்ளது.

சில ஆவணங்களில் இரட்டை கோபுரம் தாக்குதலில் ஈரானுக்கு சம்பந்தம் உள்ளதாகவும், அல் கொய்தா இயக்கத்திற்கு ஈரான் நிதியுதவி அளித்ததாகவும் தகவல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆவணங்களின் பெயரில் ஈரான் குறித்து பொய்யான தகவல்களை சி.ஐ.ஏ பரப்புவதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி முகம்மது ஜாவாத் ஸரிப் குற்றம் சாட்டியுள்ளார்.

அல் கொய்தா இயக்கத்திற்கு நிதியுதவியோ, ராணுவ ரீதியிலான உதவியோ ஈரான் செய்தது இல்லை என அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*