முடங்கியது ட்ரம்ப்பின் டூவிட்டர் கணக்கு…!!!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டூவிட்டர் கணக்கு சில நிமிடங்களுக்கு தற்காலிகமாகச் செயலிழந்தபோதும், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளமான டூவிட்டர் தெரிவித்துள்ளது.

@realdonaldtrump எனும் டொனால்ட் ட்;ரம்ப்பின் கணக்கு, டூவிட்டர் பணியாளர் ஒருவரின் கவனக்குறைவு காரணமாக நேற்று 11 நிமிடங்கள்வரை செயலிழந்து காணப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

நேற்று மாலை ட்ரம்ப்பின் கணக்கை பார்க்க வந்தவர்களுக்கு, ‘மன்னிக்கவும், அந்தப் பக்கம் இல்லை’ என்று ஒரு செய்தியை மட்டுமே காண முடிந்தது.

கணக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னர், முதல் டூவீட் குடியரசுக் கட்சியின் வரிக் குறைப்பு திட்டத்தைக் குறித்து இருந்தது.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

டூவிட்டரில் தீவிரமாக இயங்கிவரும் ஜனாதிபதி ட்ரம்ப்பை 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

screenshot-50

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*