ஆயு­தம் தூக்க நேரிடும்; மிரட்டும் செல்­வம்.!!!!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sellvam

இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டாது அர­ச­மைப்­புச் செயற்­பாட்­டி­லும் ஏமாற்­றப்­பட்­டால், தற்­போது பரந்து முன்­னெ­டுக்­கப்­ப­டும் சன­நா­ய­கப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து ஆயு­தப் போராட்­டத்­தை முன்­னெ­டுக்­கும் நில­மைக்­குச் செல்­வதை யாரும் தடுக்க முடி­யாது.

தமிழ் மக்­க­ளின் கோரிக்­கைளை நிரா­க­ரித்து மீண்­டும் இரத்த ஆறு ஓடு­வ­தற்கு வழி­செய்­யாது சந்­தர்ப்­பத்தைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­துங்­கள்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் நேற்று வியா­ழக்கிழமை இடம்­பெற்ற இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மனித வாழ்கை சக்­க­ரம் போன்று அர­சி­ய­லும் நில­மை­கள் சக்­க­ர­மாக மாறிக் கொண்டு வரு­கின்­றன. தந்தை செல்வா அன்று கூட்­டாட்சி கோரி­னார். அதன் பின்­னர் ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு கிழித்­தெ­றி­யப்­பட்­டன.

கோரிக்­கை­களை முன்­வைத்து அகிம்­சைப் போராட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது எமது தலை­வர்­கள் நையப்­பு­டைக்­கப்­பட்­ட­னர். அகிம்­சைப் போராட்­டத்தை முடக்­கிய போது தான் தந்தை செல்வா தமிழ் மக்­களை கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்று கூறி­னார். ஆயுத இயக்­கங்­கள் உரு­வா­கின.

ஆயு­தப்­போ­ராட்­டங்­கள் வலு­வ­டை­கின்­ற­போது ஆளு­கின்­ற­ வர்­க­ளின் மன­நி­லை­யி­லும் மாற்­றங்­கள் ஏற்­பட்­டன. அத்­த­கைய சந்­தர்ப்­பங்­க­ளில் சமா­தான ஒப்­பந்­தம், பேச் சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. திம்பு முதல் பல பேச்­சுக் களை ஆயுத இயக்­கங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக முன்­னெ­டுத்­தன.

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக போரா­டிய இயக்­கங்­க­ளு­டன் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்ட ஒரு­வர்­தான் பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரிஸ். அவர் தற்­போது புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான நிலைப்­பாட்­டில் இருக்­கின்­றார்.

ஏன் இப்­படி மாற்­ற­ம­டைந்­தீர்­கள் என்று ஜி.எல்.பீரி­ஸி­டம் செய்­தி­யா­ளர் ஒரு­வர் வினா­வி­னார். அதற்கு அவர், அப்­போது ஆயு­தப்­போ­ராட்­டம் இருந்­தது. அதன் கார­ணத்­தால் அவ்­வா­றான முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிலமை இருந்­தது.

அப்­ப­டி­யா­யின் ஆயு­தப்­போ­ராட்­டம் இல்­லா­த­தன் கார­ணத்­தி­னால் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்க வேண்­டிய அவ­சி­யம் இல்­லை­யென்று கூறு­வ­தற்கு முன்­வ­ரு­கின்­றாரா? ஆயு­தப்­போ­ராட்­டம் மீண்­டும் வர­மு­டி­யாது என்று யாரும் ஆரு­டம் கூறி­வி­ட­மு­டி­யாது.

அன்று தந்தை செல்­வா­வின் நில­மைக்கு கூட்­ட­மைப்பு தற்­போது திரும்­பி­யி­ருக்­கின்­றது. இத­னால் தான் நான் அர­சி­ யல் சக்­க­ரம் ஏற்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பத்­தில் கூறி­னேன்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் அர­சுக்கு வெளி­யில் இருந்து கொண்டு முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­த­து­ழைப்­புக்­களை வழங்­கு­கி­றார்.

இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தை வலு­வி­ழக்­கும் செயற்­பா­டு­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அர­சி­யல் தீர்வு வருமா என்ற சந்­தே­கம் எழும் வகை­யி­லான செயற் பா­டு­கள் ஒவ்­வொரு நாளும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

முற்­போக்கு எண்­ணத்­து­டன் நாட்­டின் எதிர்­கா­லம் தொடர்­பா­கச் சிந்­தித்து செயற்­ப­டும் எமது தலை­மை­யின் கோரிக்­கை­யை­யும், விட்­டுக்­கொ­டுப்­பை­யும் சரி­யா­கப் புரிந்து கொள்­ளாது புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் நாமும் எமது மக்­க­ளும் ஏமாற்­றப்­ப­டு­வோ­மாக இருந்­தால் எமது தலை­வர் வெறும் கையு­டன் திரும்­பு­வா­ராக இருந்­தால் நிச்­ச­ய­மாக பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நெருக்­க­டிக்­குள் ஆட்­சி­யா­ளர் முகம்­கொ­டுக்க வேண்­டிய துர­திர்ஷ்ட ­மான நில­மை­யொன்று ஏற்­ப­டும் – என்­றார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit