சிறுநீரக கல் பிரச்சனையா? இதை சாப்பிட்டாலே போதும்

பிறப்பு : - இறப்பு :

சிறுநீரக கல் பிரச்சனை ஒரு முறை வந்தால் அடிக்கடி வரும், இந்த சிறுநீரக கற்களை கரைக்க இயற்கையில் உள்ள சில உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

கேரட் மற்றும் பாகற்காய்

கேரட் மற்றும் பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், சிறுநீரகக் கற்களின் படிகங்களை படிய விடாமல் தடுத்து, அவற்றை கரைக்க உதவுகிறது.

வாழைப்பழம் மற்றும் எலுமிச்சை

வாழைப்பழம் மற்றும் எலுமிச்சை பழத்தின் விட்டமின் B6, சிட்ரேட் (citrate) ஆகிய சத்துக்கள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் (Oxalate) என்ற ரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுப்பதுடன், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழத்தில் சிறுநீரக கற்களின் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளது. இது எளிதில் சிறுநீரக கற்களை கரைக்கும்.

கொள்ளு மற்றும் பாதாம்

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவை சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். அதோடு சில காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இளநீர்

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு இளநீராவது குடிக்க வேண்டும். அதோடு சிட்ரஸ் பழச்சாறுகள் மற்றும் வாழைத்தண்டு சாறு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை?

பாஸ்பேட் மிகுந்த காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா, கோக் பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக்கீரை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் உப்பை குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து, சிறுநீரகக் கற்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
உணவில் காரம், புளி, மசாலா ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்து மிகுந்த கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit