மனைவியை 56 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவனுக்கு சிறைத்தண்டனை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

order

சுவிட்சர்லாந்தில் மனைவியை கத்தியால் 56 முறை குத்திக் கொன்ற கணவனுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குறித்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த 2011ம் ஆண்டு சுவிஸிற்கு புகலிடம் தேடி வந்துள்ளார்.

ஆனால் அவர்களுக்கு புகலிடம் அளிக்க மறுக்கப்படவே, சுவிஸ்லேயே தங்கி இருக்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் பின்னர், சுவிஸின் Gipf-Oberfrick நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் கணவன் மனைவிக்கும் இடையே நடந்த சண்டையில், குறித்த நபர் தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மனைவி, அவரிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கும் போது தோட்டத்திலே வைத்து, சமையல் கத்தியால் 56 முறை குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தினை நேரில் பார்த்த அண்டை வீட்டுக்காரர் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு மிருகம் தனது இரையை வேட்டையாடுவதைப் போல குறித்த நபரானவர் தனது மனைவியை படுகொலை செய்திருக்கிறார் எனக் கூறி 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், தனது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என 50,000 பிராங்குகளை அபராதமாகவும் அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit