ரன் மழை பொழிந்த தவான் – ரோகித்: பல நாள் தாகத்தை தீர்த்துக் கொண்ட இந்திய அணி

பிறப்பு : - இறப்பு :

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து விச தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க விரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோகித் ஜோடி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினர்.

இதனால் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறந்த வண்ணம் இருந்தன, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை ஒரு கை பார்த்த இருவரும் அரைசதம் கடந்ததால், அணியின் எண்ணிக்கையும் மளமளவென எகிறியது.

இந்த ஜோடிகள் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷிகார் தவான் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதனால் அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா 2 பந்துகளில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

இருப்பினும் அடுத்து வந்த அணியின் தலைவர் கோஹ்லி தன் பங்கிற்கு வந்த வேகத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாச, இவருக்கு இணையாக மற்றோரு துவக்க வீரரான ரோகித்தும் பவுண்டரிகள் விரட்ட இந்திய அணி 200 ஓட்டங்களை நோக்கி சென்றது.

அதன் பின் ரோகித் 80 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த டோனி தான் சந்தித்த முதல் பந்திலே சிக்ஸர் அடிக்க இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் டோனி 2 பந்துகளில் 7 ஓட்டங்களும் கோஹ்லி 11 பந்துகளில் 26 ஓட்டங்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான கப்டில்(4), முன்ரோ(7), வில்லியம்சன்(28), லாதம்(39) என அடுத்தடுத்து வெளியேற நியூசிலாந்து அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியிடம் டி20 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்த இந்திய அணி தற்போது வெற்றி பெற்று பல நாள் தாகத்தை தீர்த்துக் கொண்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit