இலங்கையின் வடக்கே மாடுகளைக் கொண்டு சென்ற ஐவருக்கு நேர்ந்த கதி!

பிறப்பு : - இறப்பு :

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நாற்பது மாடுகளைக் கடத்திச் சென்ற ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கள்ளியடிப் பகுதியிலேயே பசு உள்ளிட்ட 40 மாடுகளை கடத்திச் சென்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள், அனுமதிப்பத்திரமின்றி 40 மாடுகளைக் கடத்திச் சென்றதாகவும் இதன் அடிப்படையிலேயே குறித்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit