கொழுப்பை எரிக்கும் ஜூஸ்: வாரம் ஒருமுறை குடித்தால் போதும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

லேசான கசப்பு சுவை கொண்ட நெல்லிக்காயில் ஜூஸில் விட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த ஜூஸை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் பல ஆபத்தான நோய்கள் நம்மை அண்டாமல் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்

நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, புரத கூட்டிணைப்பை மேம்படுத்துவதால், நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை எளிதில் எரிக்கிறது.
நெல்லிக்காய் நார்ச்சத்து நிறைந்ததால், கழிவை வெளியேற்ற இயக்கங்களை ஒழுங்குப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ஹீமோகுளோபினையும், ரத்தச் சிகப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள விட்டமின் C கண் பார்வையை பழுதடையாமல் பாதுகாப்பதோடு கண் தசைகளை வலிமைப்படுத்துகிறது.
இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டினை சீராக்கி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
எலும்புகளுக்கு தேவையான கால்சியம் நெல்லியில் கிடைப்பதால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று தசைப்பிடிப்புகள் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
நெல்லிச் சாறுடன் சில துளிகள் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நெல்லி சாறுடன் மஞ்சள் மற்றும் தேனை கலந்து குடித்து வந்தால், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*