மார்பக அளவு குறைவது ஆபத்தா? என்ன நோயாக இருக்கும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மார்பகத்தின் அளவு மற்றும் வடிவம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும், அதேசமயத்தில் மார்பகத்தில் திடீரென ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

முலைக்காம்பை சுற்றி கட்டிகள்

மார்பக காம்புகளை சுற்றி உள்ள இடத்தில் வீக்கம், சிறிய பருக்கள், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பால் குழாய்களில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

அதுவே கட்டியின் அளவு பெரிதாக இருந்தால், அது நீர்கட்டி அல்லது சதை வளர்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மார்பகங்களில் ஏற்படும் வலிகள்

மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இரண்டு மார்பகங்களும் வலிக்கிறது எனில், அது ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது அல்லது அதிக கஃபைன் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

அதை தவிர, சரியாக பொருந்தாத உள்ளாடை அணியாமல் தசை சோர்வு, காயம் ஏற்படுதல், இரும்புச்சத்து குறைபாடு அல்லது மாதவிலக்கு தாமதமாதல் ஆகிய காரணத்தினாலும் மார்பகங்களில் வலி ஏற்படலாம்.

மார்பகங்களின் அளவு குறைதல்

உடல் எடை குறைந்தால், மார்பகங்களின் அளவும் குறையும் அல்லது பாலிசிஸ்ட் கருப்பை நோய்க்குறி இருந்தாலும் மார்பகங்களின் அளவில் மாற்றம் தென்படும்.

இது குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தினமும் 3 கப் காஃபி குடிப்பவர்களின் மார்பகங்களின் அளவு சிறியதாவதாக கண்டுபிடித்துள்ளனர்.

தலைகீழான முலைக்காம்புகள்

மார்பகத்தின் முலைக் காம்புகள் திடீரென உட்பக்கமாக திரும்பினால், அது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி. அதனால் இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

திரவம் வெளியேறுதல்

மார்பகத்தின் இரண்டு முலைக்காம்புகளிலும் இருந்தும் திரவம் வெளியேறினால், அது ஹார்மோன் அளவில் ஏற்பட்ட இறக்கமாக இருக்கலாம் அல்லது தைராய்டு, பால் குழாய்களில் ஏற்பட்ட சுருக்கமாகவும் இருக்கலாம்.

மார்பகத்தில் இருந்து ரத்தத்திடன் திரவம் வெளியேறினால் அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*