ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த டிப்ஸ்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

headache

தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி, தனியாக கழட்டி வைத்துவிடலாமா என்று நினைக்கும் அளவுக்கு ஒற்றை தலைவலி பாடாய்படுத்தும்.

4லிருந்து-72 மணிநேரம் வரை கூட தலைவலி நீடிக்கலாம், இப்பிரச்சனையை போக்க நம்முடைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே போதும், நல்ல தீர்வினை காணலாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கும் மருத்துவம்

தினமும் புதினா டீயை குடித்து வந்தால், நரம்புகளில் உள்ள இறுக்கத்தை தளர்த்தி ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது.
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள், நமது உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக ஒற்றைத் தலைவலியை குறைக்க செய்கிறது.
இஞ்சி ஒற்றைத் தலைவலியை மட்டுமில்லாமல், அதனால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வினை தருகிறது.
ஐஸ் பேக்கை கொண்டு தலையில் ஒத்தடம் கொடுப்பதால், மரப்பான தன்மையை அந்த இடத்தில் ஏற்படுத்தி வலியின் வீரியத்தை குறைக்கிறது.
ஒற்றைத் தலைவலி இருக்கும் போது ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற முறையில் காஃபைன் எடுத்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலியை எளிதில் குறைக்கலாம்.
மக்னீசியம் அடங்கியுள்ள உணவுகளாவன கீரைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சூரிய காந்தி இலைகள், வெள்ளை சோளம், ப்ரவுன் அரிசி, முழு தானியங்கள் ஆகிய உணவுகளை சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி வராது.
லாவண்டர் எண்ணெய்யை நெற்றியின் இரு பக்கங்களிலும், கழுத்தின் பின் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்தால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம்.
சூடான நீருடன் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குளித்து வந்தால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ஒற்றைத் தலைவலி குறையும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit