கிறிஸ்டன் கேள்வி கேட்கமாட்டார்..மின்னல் வேகத்தில் முடிவு எடுப்பவர் டோனி: இந்திய வீரர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nehra

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா, இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி டெல்லியில் தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் நெஹ்ரா ஓய்வு குறித்து கூறுகையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுவது மிகவும் சிறப்பானது.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அஜெய் ஜடேஜா மற்றும் டோனி போன்ற கூர்மையான அறிவு கொண்ட கிரிக்கெட் வீரர்களை பார்த்ததே இல்லை. அவர்கள் யார் கருத்து தெரிவித்தாலும் முழுமையாக கேட்டு, அதன்படியே விட்டுவிடுவார்கள்.
போட்டிக்கு ஏற்ப டோனி திட்டங்களை மாற்றும் போது, அதை கிறிஸ்டன் கேள்வி கேட்க மாட்டார். இதன் காரணமாகவே அந்த கூட்டணி கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

மேலும் கிறிஸ்டயன் கொடுத்த சுதந்திரத்தை டோனி ஒரு போதும் தவறாக பயன்படுத்தியது இல்லை என்றும், மின்னல் வேகத்தில் போட்டிக்கு ஏற்ப முடிவும் டோனி எடுப்பார் என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit