ஜேர்மனியில் குழந்தையின் கழுத்தறுத்து கொன்ற தந்தை: பிரித்தானியாவுக்கு தப்பியோட்டம்

பிறப்பு : - இறப்பு :

மனைவி மீது கொண்ட கோபத்தால் சொந்த மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை பிரித்தானியாவுக்கு தப்பியோடி இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தவர் 33 வயது சொஹைல். சம்பவத்தன்று மனைவியுடன் சொஹைல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பலமுறை சொஹைல் தமது மனைவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த அவர் மனைவி லுப்னா, பொலிசாரிடம் புகார் தெரிவிக்கும் பொருட்டு மகள் ஆயிஷாவை கணவருடன் விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குடியிருப்புக்கு திரும்பி வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையில் 2 வயதேயான குழந்தை ஆயிஷா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மட்டுமின்றி கணவர் சொஹைலும் அங்கிருந்து மாயமாகியிருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஹாம்பர்க் பொலிசார், கடைசியாக அவர் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் இருந்ததாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் புகலிட கோரிக்கை முன்வைத்ததாகவும், ஆனால் அரசால் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஜேர்மனியிலையே அவர் திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

பாகிஸ்தானியரான சொஹைல் தற்போது பிரித்தானியாவில் தப்பியோடியதாகவும் அவருக்கு அங்கு உறவினர்கள் இருப்பதாகவும் பிரித்தானிய பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கு விசாரணையை யூரோபோல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit