காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்க வேண்டும்- சிதம்பரம் வலியுறுத்தல்: வன்மையாக கண்டிக்கும் பா.ஜ.க

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

baaga

காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என, ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, பா.ஜ.க. கடும் கண்டணம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரமான ப.சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அதற்கு பா.ஜ.க. யின் தலைவர்கள், காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் தொடர்பில் செய்தியாளர்களிடம் ப.சிதம்கரம் கருத்து தெரிவிக்கையில்,

“ஜம்மு-காஷ்மீர் இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதே வேளை அரசியலமைப்பு சட்டம் 370 ஆவது பிரிவின் கீழ், தன்னாட்சி அதிகாராம் வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடினேன், அவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கூறினார்கள். அதுவே எனது விருப்பமாகவும் உள்ளது.” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இவருடைய கருத்தினை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பிடுகையில்,

“காங்கிரஸ் கட்சி 1947 ஆம் ஆண்டில் இருந்தே தவறான கொள்கை முடிவுகளை எடுத்து வருகின்றது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் நாட்டில் மேலும் நெருக்கடியை உருவாக்குவதற்கு அந்த கட்சி விரும்புகின்றது. ப.சிதம்பரம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி, ஆனால் வியப்பை ஏற்படுத்தவில்லை.

ஏனெனில் காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஆகியோர், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு சார்பாக போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தானே, இவ்வாறு பா.ஜ.க. சிதம்பரத்தை நோக்கியும், காங்கிரஸ் கட்சியை நோக்கியும், கடுமையாக கண்டணம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit