பாகிஸ்தான் அசத்தல்: டி20 தொடரிலும் வொயிட் வாஷ் ஆன இலங்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இலங்கை அணி, பாகிஸ்தான் அணி, அங்கு 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் இரண்டு டி-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்றது. இரு அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பகர் சமானும், உமர் அமீனும் களமிறங்கினர். பகர் சமான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முனவீரா பந்து வீச்சில் வெளியேறினார்.

அதன்பின்னர் பாபர் அஸாம் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய உமர் அமீன் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சோயிப் மாலிக் அதிரடி காட்டி அரைசதம் கடந்தார். அவர் 24 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி, இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி சார்பில் சஞ்ஜெயா, தில்சான் முனவீரா, இசுரு உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு முனவீரா ஒரு ஓட்டங்களிலும், குணதிலகா 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணிக்கு சோயிப் சானகா (54) மட்டும் கைகொடுக்க, 20 ஓவரில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமீர் 4 விக்கெட்களும், பஹிம் அஷ்ரப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். மேலும் இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும் இலங்கை அணி இதற்கு முன்னர் ஒருநாள் தொடரை 5-0 என்று வொயிட் வாஷ் ஆன நிலையில், தற்போது டி20 தொடரிலும் வொயிட் வாஷ் ஆகியுள்ளது. ஆனால் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*