விபச்சாரி என திட்டிய மகன்: தாய் செய்த தைரியமான செயல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விபச்சாரி என திட்டிய மகன் மீது தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தாய்க்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tendai என்ற பெண் தனது மகன் Kumbulani Ndlovu (24) என்பவருடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனது தாயில் நடத்தையில் சந்தேகம் கொண்ட Kumbulani அவரை விபச்சாரி என கூறியுள்ளார்.

இது குறித்து மகன் மீது Tendai நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் பேசிய Kumbulani, தனது வீட்டில் தினமும் இரவு யாரோ வருவது போல இருப்பதாகவும், தாயின் படுக்கை அறையிலிருந்து விசித்தரமான சத்தம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே அவரை விபச்சாரி என கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதை முற்றிலும் மறுத்த Tendai கூறுகையில், எனக்கு மாதம் வரும் ஓய்வூதிய பணத்தை Kumbulani தனக்கு தரும்படி மிரட்டி கேட்கிறான்.

தரவில்லையெனில் என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவதாக கூறுகிறான். அதன் காரணமாகவே என் மீது வீண்பழி சுமத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், படிப்பை பாதியிலேயே நிறுத்திய Kumbulani வேலைக்கு செல்லாமல் ஊதாரிதனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறுகையில், Kumbulani தாயுடன் சமாதானமாக இருக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் Tendai-ன் வீட்டையோ அல்லது அங்கு இருக்கும் பொருளையோ Kumbulani விற்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*