அப்பா என்னை காப்பாற்றுங்கள்! மகனை கண்முன்னே பறிகொடுத்த தந்தையின் இறுதி நிமிடங்கள்

பிறப்பு : - இறப்பு :

கடல் வழியே வங்கதேசம் சென்ற போது மனைவியையும், குழந்தையையும் பறிகொடுத்த நினைவுகளை கண்ணீருடன் பகிர்கிறார் ஜப்பார்.

மியான்மரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதில் தன் குடும்ப உறவுகளை இழந்து கண்ணீடு வடிப்பவர்கள் ஏராளம், தினந்தோறும் நரக வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் ஜப்பார், கடல்வழியே வங்கதேசம் சென்ற போது இவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது.

பெரிய அலை வந்து அடித்ததில் படகு அப்படியே கடலுக்குள் சென்றது, இதில் ஜப்பாரின் மனைவி, இரு குழந்தைகள் பரிதாபமாய் பலியாகினர்.

ஜப்பார் மட்டும் பிழைத்துவிட்டார், படகில் தண்ணீர் புகுந்ததும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

படகு மூழ்கும் நிலையில் தன் கையில் இருந்த மகன் நழுவியதும், அப்பா, அப்பா… என்னை காப்பாற்றுங்கள் என கதறினாராம்.

அந்த வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்கிறார் ஜப்பார்!!!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit