யாழ். குடாநாட்டில் குடும்பமே தற்கொலை! சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

28 வயதான தாயாரும் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு வயதான பிள்ளைகளின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த 4 பேரும் ஐஸ்கிரிமில் விஷம் கலந்து பருகிய நிலையில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*