யாழில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள ஜெலி மீன்கள்! ஒருவர் மரணம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணம் காக்கைதீவுக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் மயக்க மடைந்த நிலையில் உயிரிழந்தார்.

குறித்த மீனவர், ஜெலி மீன்கள் கடித்ததனால் உயிரிழந்தார் என மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை காக்கைதீவுக்கடலில் இடம்பெற்றது.

சுதுமலை தெற்கு, சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சாந்தராஜா (வது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

காக்கை தீவுக் கடலில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவருக்கு நெல்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

தெய்வேந்திரம் சாந்தராஜா சக மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*