கனடாவில் பர்தாவை அகற்றிய மகளை தாக்கிய தந்தை!

பிறப்பு : - இறப்பு :

கியுபெக்கை சேர்ந்த மனிதன் ஒருவர் இவரது இளம் மகளை கடந்த ஒரு வருடமாக துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதனை கௌரவ-அடிப்படையிலான துன்புறுத்தல் என பொலிசார் அழைக்கின்றனர்.

இதற்கு காரணம் இப்பெண் தனது வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் பர்தாவை அகற்றுவதை மனிதன் கண்டுபிடித்து விட்டதாகும்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மனிதனின் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.

குறிப்பிட்ட பெண் பொலிசாரை அணுகி நடப்பதை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து புதன்கிழமை மனிதன் கைது செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இளைஞர் பாதுகாப்பில் உள்ளார்.

கியுபெக் காடினியுவை சேர்ந்த 35வயது குடியிருப்பாளர் வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜராக்கப்பட்டு இவர் மீது தாக்கிய குற்றச்சாட்டு மற்றும் ஆயுதம் அச்சுறுத்தல் போன்ற தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இப்பெண்ணின் நடவடிக்கை இவரைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மற்றய பெண்களையும் முன் வர வழிவகுக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit