டோனி நிகழ்த்தியுள்ள உலக சாதனை…!!!!

பிறப்பு : - இறப்பு :

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் டோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் டோனி இரண்டு கேட்ச்கள் பிடித்தார்.

இதில் முதல் கேட்ச் பிடித்த போது சர்வதேச அளவில் இந்திய மண்ணில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் டோனி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை 308 போட்டிகளில் பங்கேற்றுள்ள டோனி, இந்திய மண்ணில் நடந்த போட்டிகளில் மட்டும் 201 கேட்ச்களை பிடித்துள்ளார்.

தவிர, இந்திய மண்ணில் 200 கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் டோனி முதலிடம் (201) பிடித்துள்ளார். இப்பட்டியலில் டிராவிட், அசாருதின், சச்சின் ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

இதோடு சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் டோனி நான்காவது இடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (417 கேட்ச்கள்), தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (402), இலங்கையின் சங்ககாரா (383) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit