அமேசானின் அசத்தும் ஸ்மார்ட் லாக் சிஸ்டம்..!!!

பிறப்பு : - இறப்பு :

பிரபல இணையதள விற்பனை நிறுவனமான அமேசான் தற்போது வாடிக்கையாளர்களின் குறையை களையும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வெகுகாலமாய் ஆர்டர் செய்த பொருட்களை விநியோகிக்கும் பொழுது வாடிக்கையாளர்கள் அதனை பெறும் நேரம் ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது.

அதனை போக்கும் வகையில் அமேசான் அறிமுகம் செய்துள்ள ‘ஸ்மார்ட் லாக் சிஸ்டம்’ உள்ளது.

இந்த ஸ்மார்ட் பூட்டுடன் ஒரு கண்காணிப்பு கமெராவும் தரப்படும், அதனை நமது வீட்டின் கதவிலும், உள் அறையிலும் பொருத்திக்கொள்ள வேண்டும்.

amazon-smart-lock

டெலிவரி ஆகும் நேரத்தில் கடவுச்சொல் ஒன்று நமது கைப்பேசிக்கு அனுப்பப்படும். அதனை டெலிவரி செய்ய வரும் நபரிடம் நாம் தெரிவித்தால் போதும்.

அதன் மூலம் அவர் கதவினை திறந்து ஆர்டர் செய்த பொருளினை வீட்டினுள் வைத்து விடுவார்.

அவரின் நடவடிக்கைகள் வீட்டினுள் பொருத்தப்பட்டிருக்கும் கமெராவில் பதிவுசெய்யப்படும், இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit