சுவிசில் நயினை மக்கள் நடாத்தும் பந்தபாசத்தின் கலைநிகழ்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நயினாதீவு அபிவிருத்திக் கழகம் – சுவிற்சர்லாந்து தனது இருபதாவது அகவையை ஒட்டி ஏற்பாடு செய்துள்ள பந்தபாசத்தின் மாபெரும் கலைநிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை பேர்ண் முன்கன்புக்சே மண்டபத்தில் நடைபெறும். கழகத் தலைவர் நாகரெத்தினம் லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கனடாவில் இருந்து வருகைதரும் சட்டத்தரணி நாகேசு சிவராசசிங்கம் பிரதம விருந்தினராகவும், கழகத்தின் தாயக இணைப்பாளரான சமூக சேவகர் முத்தையா மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வர்.

நடனம், நாடகம், வில்லிசை, ‘அன்னை மண்ணை முத்தமிட ஆசை’ எனும் தலைப்பிலான கவியரங்கம், ‘புலம்பெயர் வாழ்வில் திருமணமான ஆண்கள் தங்கள் குடும்பங்களை அடக்கி ஆள்கிறார்களா? இல்லை அடங்கி வாழ்கிறார்களா?’ என்ற தலைப்பிலான பட்டிமன்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பட்டிமன்றம் ‘சன் தொலைக்கட்சி புகழ்’ கங்கை மகன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

nainai2

சுவிசில் வாழும் நயினாதீவு மக்களினால் நயினாதீவின் பல்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நயினாதீவு அபிவிருத்திக் கழகம் கடந்த 20 வருடங்களாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*