இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது

பிறப்பு : - இறப்பு :

தமிழ்நாட்டில் பிறந்த சில மணிநேரங்களில் இறந்ததாக மருத்துவர்களால் கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் குழந்தை ராஜ், இவரது மனைவி வினிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 8 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை இறந்துவிட்டது என அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க, குழந்தை ராஜீம், அவரது அம்மாவும் குழந்தையை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கே சிறிது நேரத்தில் குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது, உடனடியாக பதறிக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அரசு மருத்துவர்களின் அலட்சியப்போக்கு அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit