உலகின் மொத்த டெக்னாலஜியையும் அழித்து விடுமா சூரியன்? – அதிர்ச்சி ரிப்போர்ட்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அன்று சூரியன் கொஞ்சம் அதிக உக்கிரத்துடன் காணப்பட்டது. டெக்னாலஜி கொண்டு ஆராய முடிந்தது. உலகம் முழுவதும் சற்று கூடுதல் வெப்பம். திடீரென இரண்டு பெரிய சூரிய கிளரொளி (Solar Flare) சூரியனில் இருந்து வெளியேறியது. இரண்டுமே மிகவும் சக்திவாய்ந்த கிளரொளிகள். அவற்றில் ஒன்று கடந்த 12 வருடங்களாகப் பதிவான கிளரொளிகளை விடவும் அதிக வீரியம் கொண்டது. இதனால் காந்தப் புயல் உருவானது. கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நிகழ்ந்த சம்பவம் இது. இதுகுறித்து நாசாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதேபோல் கடந்த 2003-ம் வருடம் வெளிவந்த ஒரு கிளரொளியும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பேரொளி. இதனால் உயர் அதிர்வெண் ரேடியோக்கள் மற்றும் ஜிபிஎஸ் தகவல்தொடர்புகள் போன்றவை ஒரு மணி நேரம் செயல்படாமல் போனது. பெரும்பாலும் இவை பிளாஸ்மாவின் ஜொலிக்கும் கயிறுகளால் ஆனது. பூமியின் அளவைவிட பத்து மடங்கு பெரியது. இப்படிப்பட்ட ஒரு ஒளி பூமியை நெருங்கினால் பெரும் பாதிப்புகள் நிகழ வாய்ப்பு உண்டு.

சூரிய கிளரொளி
magnificent_cme_erupts_on_the_sun_-_august_31_06403
Photo Courtesy: NASA

சூரியனே நமது எதிரி
தற்போதைய நிலையில், உலகின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளும் சூரியனை நம்பியே உள்ளன. ஆனால், ஒரு நூறு வருடங்களுக்குப் பிறகு, இந்த நிலை மாறலாம். தோராயமாக 150 வருடங்களுக்கு முன், ஒரு மிகப்பெரிய காந்தப் புயல் பூமியைத் தாக்கியது. அதுதான் இதுவரை நிகழ்ந்ததிலேயே பெரிய புயல். அப்படிப்பட்ட ஒரு புயல் தற்போது நிகழ்ந்தால் மின்சார கட்டமைப்புகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, இணையம் உட்பட அனைத்து டெக்னாலஜிகளையும் நேரடியாகப் பாதிக்கும். சமீபத்திய ஆய்வுகள் இவ்வகை புயல் மீண்டும் அடுத்த நூற்றாண்டுக்குள் நிகழும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமான புற ஊதா கதிர்வீச்சு மற்றும் உயர் ஆற்றல் துகள்கள் நம் ஓசோன் அடுக்கை அழிக்க வல்லது. இதனால் DNA மாற்றங்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் செயல்பாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். அந்த 150 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பெரிய காந்தப் புயலால் தந்தி மெஷின்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. தந்திக் கம்பிகளில் மின்சாரத்தை உணர்ந்ததாக அதைப் பயன்படுத்தியவர்கள் கூறினார்கள்.

இப்போது நிகழ்ந்தால்…?
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர் ஏவி லோப் “அந்தக் காலகட்டத்தில் பெரிய அளவில் தொழிநுட்பம் வளரவில்லை. அதனால் அப்போது நிகழ்ந்த பாதிப்புகள் மிகவும் குறைவு. அது இப்போது நிகழ்ந்தால் பல டிரில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்படலாம். மின் கட்டமைப்புகள், அனைத்துக் கணினிகள், அணு உலைகள் மீது இருக்கும் குளிரூட்டும் அமைப்புகள் என அனைத்தும் செயலிழக்கும். பெரும் தீங்கு நடக்கும். இது நடப்பதற்கு 12 சதவிகித வாய்ப்பு மட்டுமே இருந்தாலும், விண்கற்கள் மோதுவது குறித்து நாம் செய்யும் ஆராய்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கு நாம் தருவதில்லை. இது அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

டெக்னாலஜியை அளிக்கும் காந்தப் புயல்
1m7-3-flare-800x533_06480
Photo Courtesy: NASA

ஆராய்ச்சியாளர் ஏவி லோப் அவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மனஸ்வி லிங்கம் அவர்களும் இந்த பிரச்னைக்கு தீர்வு இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதன்படி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே பெரும் சுழற்சியுடைய மின் சக்தியை கடத்தும் கம்பியை நிறுவினால் போதுமானது. அது ஒரு காந்த தடுப்பாகச் செயல்பட்டு காந்தப் புயலைப் பூமியை அண்ட விடாமல் செய்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால், இதற்குக் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர்கள் தேவைப்படும்.

கவலை வேண்டாம், வழி பிறக்கும்
இதுகுறித்து கருத்து தெரிவித்துப் பேசிய யேல் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர் கிரெக் லாப்லின், ”காந்தப் புயல்குறித்து பெரிய அளவில் தற்போது கவலைப் பட வேண்டியதில்லைதான். ஆனால், அது குறித்த ஆராய்ச்சிகள் நிச்சயம் நிறுத்தப்படக் கூடாது. அதன் உருவாக்கம், அதன் தாக்கம் குறித்துத் தொடர்ந்து ஆராய வேண்டும். இதிலிருந்து தப்பிக்க அப்போதுதான் மாற்று வழி ஒன்று கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*