அஸ்வின் ஜடேஜா இந்திய அணியில் இருந்து புறக்கணிக்க என்ன காரணம்? பிசிசிஐ அதிகாரி

பிறப்பு : - இறப்பு :

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு பதிலாக வாய்ப்பளிக்கப்பட்ட சகால் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவதால், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் இடம் கேள்வி குறியானதோடு மட்டுமின்றி, அவர்களை இனி இந்திய அணியில் பார்ப்பது மிகவும் கடினம் என கூறப்பட்டது.

சமீபத்தில் கூட இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ணத் தொடருக்காக சிறந்த வீரர்களை கண்டறிய வேண்டும் அதன் காரணமாக போதிய அனுபவம் பெற்றுள்ள அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு அதிகாரி ஒருவர், இந்திய அணிக்காக அஷ்வின், ஜடேஜா அளித்த பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது.
அதேநேரம் நாம் எதிர்காலத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் சுழற்சி முறையில் இந்திய அணியில் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit